ஈப்போ மார்ச் 2-

புந்தோங்,  ஜாலான் சுங்கை பாரி வழியில்  உள்ள தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில்  அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியரை எதிர்த்து இருவர் போட்டியிடுகின்றனர் .

அப்பொறுப்புக்கு கே. பெருமாள் மற்றும் எஸ் பாலகிருஷ்ணன் ஆகிய இரு வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பரபரப்பான சூழ் நிலையில்  இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தேர்தல் நாளை 3ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பந்தோங்கில் உள்ள அருளொளி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அதன் ஆலயத் தலைவராக இருந்து வரும் இருதயம் செபாஸ்தியரை எதிர்த்து  கே. பெருமாள் மற்றும் எஸ் . பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர் .

ஆலயத்தின் துணைத் தலைவர் பதவிக்கு ரா. நாகேந்திரன் மற்றும் செயலாளர் பதவிக்கு ச. காளிதாஸ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு துணைச் செயலாளர் கே.தியாகுவை எதிர்த்து முத்து என்பவர் போட்டியிடுகின்றார்.

 

பொருளாளராக இருந்து வந்த ஆர்.விமலன் மீண்டும் போட்டியிடாததால் அப்பொறுப்புக்கு சந்தரசேகரன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் 15 நிர்வாகப் பொறுப்புக்கு 21 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.