ஈப்போ, மார்ச் 3-

புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்தோருக்காக ஒதுக்கீடு  செய்யப்பட்ட பெம்பான் நிலத்திடம் பறிபோகும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலத்திட்டத்தில் நிலம் கிடைத்தவர்கள் விரைவு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிரந்தரமாக பறிபோகும் அபாயத்தை அடைந்துள்ளது.

புந்தோங் சுற்றுவட்டாரத்தில் வசித்து வந்தவர்களுக்காக குறிப்பாக கம்போங் செக்கடி மக்களுக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்ட பெம்பான் நிலத்திட்டத்திட்டதில் தொடக்கமாக 133 குடும்பங்களுக்காக நிலத்தை வழங்க தேசிய முன்னணி ஆட்சியின்போது அங்கிகரிக்கப்பட்டது.

அந்த நிலத்திட்டத்திற்கு முன்னாள் பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ரிம. 50 லட்சம் அந்த நிலத்தை மேம்படுத்த வழங்கினார்.

நிஅலத்தை வழங்குவதற்குறிய  ஏற்பாட்டை  தேசிய முன்னணி செய்தபோது   ஆட்சி கைமாறியது.

நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் கீழ் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் செய்த ஏ. சிவநேசன் தேசிய முன்னணி அங்கிகரிக்கப்பட்ட 133 குடும்பங்களுக்கு நிலத்தை வழங்க ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தை கண்காணிக்கும் பொறுப்பை புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிலவிவகாரம் குறித்து அண்மையில் அவர் வெளியிட்ட தகவலில் பெம்பான் நிலத்திட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பை செய்தார்.

அது குறித்து கருத்துரைத்த ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெயகோபி, இந்த மக்களுக்கு நிலம் கிடைக்கும் அங்கிகாரத்தை கடந்த ஆட்சியின் போது வழங்கபட்டது.

நடப்பில் உள்ள அரசாங்கம் அந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளதா என்பது உண்மையான காரணங்கள் தெரியவில்லை.