spot_img
18.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி கல்வி அறவாரியத்தில் அரசாங்க பிரதிநிதிகள் தேவை! லிட்டல் இந்தியா வளாகத்தில் அரசு சாரா அமைப்பினர்...

கல்வி அறவாரியத்தில் அரசாங்க பிரதிநிதிகள் தேவை! லிட்டல் இந்தியா வளாகத்தில் அரசு சாரா அமைப்பினர் அமைதி மறியல்

0
348

ஈப்போ மார்ச் 3-

பேரா இந்திய மாணவர்கள்  கல்வி  மேம்பாட்டு அறவாரியத்தில் நடப்பு அரசாங்க பிரதிநிதிகள் இயக்குனர்களாக நியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இங்குள்ள லிட்டல் இந்தியா வளாகத்தில்  இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற  அமைதி மறியலில் இந்த கோரிக்கையை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்கு  தேசிய முன்னணி அரசாங்கத்தால் சுங்கையில் 2000 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

அதில்  9  வாரிய உறுப்பினர்கள் இயக்குனர்களாக இடம்பெற்றுள்ளனர். இதில் நடப்பு அரசாங்க பிரதிநிதி தேவை என்று முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இந்த அமைதி மறியலை தொடங்கியுள்ளனர்.

இதற்கு தீர்வு பிறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்ட பலர் கருத்துரைத்தனர்.

அந்த அறவாரியத்தில்   அரசாங்கம் பிரதிநிதி இடம் பெறுவதின் வழி அதில் மேலும் நன்மையடைய  வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றனர்.

அந்த நிலத்தில் செம்பனை பயிர் செய்யப்பட்டுள்ளது.அதற்கு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் நிதியையும் கடனாக வழங்கி ஆதரவு அளித்துள்ளது