புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் திடீர் வாபஸ்! பெருமாள் தலைவரானார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் திடீர் வாபஸ்! பெருமாள் தலைவரானார்

ஈப்போ மார்ச் 3-

புந்தோங்கில்  மிகவும் பிரசித்திப்  பெற்ற தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட   கே.பெருமாள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட  அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும்  திடீர் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

புந்தோங்கில் உள்ள அருளொளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரா.நாகேந்திரன் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட காளிதாஸ் ஆகிய இருவரும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட   கே. தியாகு பதவியை தற்காத்துள்ளார் இவரை  எதிர்த்து போட்டியிட்ட  முத்து என்பவர் திதோல்வி கண்டார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திரசேகரன் வெற்றிப் பெற்றுள்ளார் . இப்பதவிக்கு மகேந்திரன் தோல்விக் கண்டார்.

நிர்வாக பதவிக்கு 21 பேர் போட்டியிட்டனர் அதில் 15 பேர் தேர்வாகினர்  .

One thought on “புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் திடீர் வாபஸ்! பெருமாள் தலைவரானார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன