கோலாலம்பூர், மார்ச் 3-
இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா உட்பட 6 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன.
மார்ச் 23ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை ஈப்போவில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் மலேசியாவுடன் இந்தியா, தென்கொரியா, ஜப்பான் ,தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
1983ஆம் ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி தொடங்கியது முதல் மலேசியா அப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை பெறவில்லை. இம்முறை எப்படியும் வெற்றியாளர் பட்டத்தை வெல்வதற்கு மலேசிய ஹாக்கி அணி தீவிர முனைப்பு காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எதிர்வரும் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை புக்கிட் ஜலில் ஹாக்கி விளையாட்டரங்கில் உலக செரிஸ் ஹாக்கி போட்டி நடைபெறவிருக்கிறது.
இப்போட்டிக்கு மலேசியா சிறந்த முறையில் தயாராகு வதற்கும் அப்போட்டியில் வெற்றி பெறுவதற்கும் சுல்தான் அஸ்லான் ஷா போட்டி முக்கிய தளமாக அமையும் என மலேசிய ஹாக்கி சங்கத்தின் தலைவர் டத்தோ சுபஹான் கமால் கூறினார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியாக உலக செரிஸ் போட்டி அமைகிறது. கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் மலேசியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி தகுதி பெற்று ஜப்பான் அணியிடம் தோல்வி கண்டதால் வெள்ளிப் பதக்கத்தை வென்றது .
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கு மலேசியா தவறியதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இயல்பாக தேர்வு பெறும் வாய்ப்பை இழந்தது.
மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் கலந்து கொண்ட 16 குழுக்களில் மலேசியா கடைசி இடத்தைப் பெற்றது.


