Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் லீக் - ஹாரி கேனின் கோலால் காலிறுதிக்குள் நுழைந்த டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

சாம்பியன்ஸ் லீக் – ஹாரி கேனின் கோலால் காலிறுதிக்குள் நுழைந்த டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

டார்ட்மூண்ட், மார்ச்.6-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணம் ( சாம்பியன்ஸ் லீக் ) கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தகுதிப் பெற்றிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மீண்டும் காலிறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் லண்டனில், வெம்பிளி அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 3 – 0 என்ற கோல்களில் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்டை வீழ்த்தியது. இந்நிலையில் செவ்வாய்கிழமை பொருசியாவின் சொந்த அரங்கில் நடந்த இரண்டாம் கட்ட ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களையும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முறியடித்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய தருவாயில் ஹாரி கேன் போட்ட கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது. ஜெர்மனி பண்டேஸ்லீகா போட்டியில் முதலிடத்தில் இருக்கும் பொருசியா டார்ட்மூண்டுக்கு இந்த தோல்வி மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

latest articles

explore more