சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசியாவின் முன்னணி கலைஞர் ரவிசங்கர் ராமமூர்த்தி காலமானார்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவின் முன்னணி கலைஞர் ரவிசங்கர் ராமமூர்த்தி காலமானார்!

கோலாலம்பூர் மார்ச் 6-

மலேசிய கலைத்துறையில் நன்கு அறிமுகமான பரத நாட்டிய கலைஞரான ரவிசங்கர் ராமமூர்த்தி காலமானார்.

கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பல கலைஞர்கள் அவரை நேரடியாக சென்று தங்களின் ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வந்தனர்.

அவர் நலம் பெற்று மீண்டும் மலேசிய கலைத்துறைக்கு திரும்ப வேண்டுமென கலைஞர்கள் தங்களின் சமூக தளங்களில் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் அவர் இன்று காலமானார்.

மலேசிய கலை துறையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்கு அறிமுகமான ரவிசங்கர், அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். கலைத் துறையில் தனக்கென தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

அவரின் மரணம் மலேசிய கலை துறையையும் அதைச் சார்ந்த கலைஞர்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென கலைஞர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன