புத்ராஜெயா, மார்ச் 6-
நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறும் என்று எஸ்பிஆர் எனப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதே வேளையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஆணையத்தின் தலைவர் அஸஹார் அஜிசான் ஹருண் கூறினார்.
ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் விவகாரம் தொடர்பான சிறப்புக் குழுவிற்குப் பின்னர் அஸஹார் செய்தியாளர்களிடம் இவ்விவரங்களை வெளியிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கான தனது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்த சிரம்பான் தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்யக் கோரி அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் செய்த மேல் முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நிராகரித்ததைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.


