Homeஅரசியல்பெம்பான் நிலத்திட்டம் ரத்தா? மந்திரி புசாரிடம் மகஜர்!

பெம்பான் நிலத்திட்டம் ரத்தா? மந்திரி புசாரிடம் மகஜர்!

ஈப்போ, மார்ச் 6-

கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கிடைக்கும் என்ற காத்திருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பெம்பான் நிலத்திட்டம் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதன் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுத்தான்  என்னவென்ற கேள்வியை முன் வைத்து பாதிக்கப்பட்ட 133 குடும்பங்களின் சார்பில் பிரதிநிதிகள் இன்று மாநில மந்திரி புசாரின்அலுவலகத்தில்  மகஜர் வழங்கினர் .

பல போராட்டங்களுக்குப் பின்னர் பந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு பெம்பானில் 147 ஏக்கர நில ஒதுக்கீட்டை தேசிய முன்னணிவசெய்திருந்தது.

அந்த நிலத்தில் தொடக்கமாக 133 குடும்பங்கள குடியேற்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் மாநில தேசிய முன்னணி அரசு பொதுத் தேர்தலில் தோல்விக் கண்டது.

ஆட்சி கைமாறியதைத் தொடந்து இந்த நில விவகாரத்தை கவனித்த ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் அந்த 133 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த நிகழ்வில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் ஆகிய இருவரும் கலந்துக்கொண்டனர்.

கடந்த மாதம் சிவசுப்பிரமணியம் , பெம்பான் நிலத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு அடக்குமாடி வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நில விவகாரம் தொடர்பாக மாநில மந்திரி புசாரை சந்திக்கவும் அதன் உண்மை நிலவரத்தை அறியவும் மற்றும் மீண்டும் 133 குடும்பங்களுக்கு நிலத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மகஜரை மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக  டி.தேவசிகாமணி, எம்.சிவா மற்றும் வி்.சந்திரசேகரன் கலந்து கொண்டனர்.

மந்திரி புசாரின் சார்பில் அவரின் சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி கைரூள் ஷாரின் மகஜரை பெற்றுக்கொண்டார் . அதனை சிவநேசனிடமும் ஒப்படைக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட அவ்விரிடமும் அந்த நிலத்திற் காக  மக்கள் எதிர் நோக்கிய நிலவலம் குறித்து மக்கள  பிரதிநிகள்  விளக்கம் அளித்தனர்.

இந்த சந்திப்பில் தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜெயகோபியும் கலந்துக்கொண்டனர்.

spot_img

latest articles

explore more