புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வேட்பாளரை முடிவு செய்வதில் தகராறு வேண்டாம் -பிகேஆர் தலைமைத்துவத்திடம் விட்டு விடுவீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

வேட்பாளரை முடிவு செய்வதில் தகராறு வேண்டாம் -பிகேஆர் தலைமைத்துவத்திடம் விட்டு விடுவீர்

சிரம்பான், மார்ச் 6-

எதிர்வரும்  ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பிகேஆர் தலைமைத்துவத்திடம் விட்டுவிடும்படி நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர் விவகாரத்தில் தகராறு செய்து கொள்ள வேண்டாம் என அவர் பிகேஆர் உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். ரந்தாவ் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதை பிகேஆர் கட்சியின் தலைமைத்துவத்திடம் விட்டுவிடும்படி நெகிரி செம்பிலான் பிகேஆர் தலைவருமான அமினுடின் வலியுறுத்தினார்.

இதற்கு முன் பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் சமர்பித்த பெயர்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதேபோன்று ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் கட்சி தலைமைத்துவம் முன்மொழியும் வேட்பாளரை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமினுடின் வலியுறுத்தினார்.

வேட்பாளருக்காக பிகேஆர் உறுப்பினர்கள் தங்களுக்கிடையே தகராறில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர் குறித்து கட்சி தலைமைத்துவம் முடிவு செய்யும்போது கட்சி உறுப்பினர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாமான் புக்கிட் சிரம்பானில்  வாங்கக்கூடிய  கட்டுப்படி விலையிலான வீடுகளுக்கான குலுக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன