அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பேராவில் ஆட்சி கவிழாது! கட்சி தாவிய தேசிய முன்னணி முன்னாள் உறுப்பினர் டத்தோ சைனூல் பாட்ஷி திட்டவட்டம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேராவில் ஆட்சி கவிழாது! கட்சி தாவிய தேசிய முன்னணி முன்னாள் உறுப்பினர் டத்தோ சைனூல் பாட்ஷி திட்டவட்டம்

ஈப்போ, மார்ச் 7-
பேராவில் ஆட்சி மாற்றம் வராது  என்று  நம்பிக்கை கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய தேசிய முன்னணி முன்னாள் உறுப்பினரும் நடப்பு. சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சைனூல் பாட்ஷி கூறினார்.

பேரா மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை வழி நடத்த தாமும், துவாலாங் செக்கா சட்டமன்ற உறுப்பினர்  டத்தோ நோலி அஷிலின் முகமட் ராட்ஷி ஆதரவு அளித்தோம்.

பேராவில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியை பிடிக்கப்போவது நாடு தழவிய நிலையில் பேசப்பட்டு வருகிறது.

அந்த தகவலை யாரும் நம்பவேண்டாம்.  நான் தொடந்து நம்பிக்கை கூட்டணிக்கே முழு ஆதரவு. வழங்குவேண் தேசிய முன்னணிக்கு இல்லை என்றார்.

அம்னோவில் இருந்து வெளியேறி பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளேன் . எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.

இம்மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து ஆட்சியை நிலை நிறுத்தும் உறுதியாக நம்புகிறேன் என்று இன்று காலை  மாநில அரசாங்க செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத்  தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தாம் மாநில சுல்தானை சந்தித்து தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கவிருப்பதாக வெளி வந்துள்ள தகவலில் உண்மையில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

மேலும் பேசிய அவர்,  நடப்பு ஆட்சியை  கவிழ்க்க பெரும் ஆதரவு வழங்கி வருவதாகவும் அது தொடர்பாக மாநில சுல்தானை சந்தித்துள்ளதாக கூறப்படும் தகவலிலும் உண்மையில்லை என்று தெளிவுப்படுத்தினார்.

பேராவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்கிய தேசிய முன்னணியின் முன்னாள் உறுப்பினரும் நடப்பு துவாலா செக்கா சட்டமன்ற உறுப்பினருமான  டத்தோ நோலியிடம் வாட்ஸ் ஆப் வழி தொடர்புக் கொண்டதாக தெரிவித்தார்.

அதற்கு அவர்  நம்பிக்கை கூட்டணி ஆட்சி மாறப்போவதாக கூறப்படும் தகவல்  அவருக்கும் அதிர்ச்சியாக ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இம்மாநிலத்தில்  தேசிய முன்னணிக்கு 25 தொகுதிகளையும், பாஸ் 3 இடங்களையும், நம்பிக்கை கூட்டணி 30 தொகுதிகளையும்,  முன்னாள் அம்னோ உறுப்பினரான  டத்தோ நோலி சுயேட்சை உறுப்பினராக இருந்து நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்கி வருகிறார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன