திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இசிஆர்எல் ரயில் திட்டம்; செலவு குறைக்கப்பட்டால் தொடரும்
அரசியல்முதன்மைச் செய்திகள்

இசிஆர்எல் ரயில் திட்டம்; செலவு குறைக்கப்பட்டால் தொடரும்

கோலாலம்பூர், மார்ச் 7-

இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை ரயில் இணைப்புத் திட்டத்திற்கான செலவை சீன அரசாங்கம் குறைந்தால், அத்திட்டம் குறித்த அடுத்தக் கட்ட முடிவு செய்யப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மேற்கொள்ளப்படவிருக்கும் சீன நாட்டுக்கான பயணத்தின்போது, இத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக லிம் குவாங் எங் கூறினார்.

இந்த இசிஆர்எல் திட்டத்தின் மொத்த செலவு ஐந்தாயிரத்து 500 கோடி வெள்ளி என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தை, மூவாயிரத்து 500 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் முன்பு கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன