சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > `சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா!
கலை உலகம்

`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா!

சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘சிறுத்தை’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவை இயக்குகிறார் சிவா என்கிற செய்தி வந்தது. ஆனால், சிவா அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என பிஸியாகிவிட்டார். சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறார் சிவா என்ற செய்திகளும் வந்தன.

அதற்கு முன், சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால், தன் உடல் எடையைக் குறைப்பதற்காக சிகிச்சையில் இருக்கிறார் இயக்குநர் சிவா. சிகிச்சை முடிந்து வந்தவுடன், சூர்யாவை இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்துக்கான ஷூட்டிங், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள், ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டு, இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படம், கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவை வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன