கோலாலம்பூர், மார்ச்.8-
தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் பொறுப்பில் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தொடர்ந்து நீடிப்பார் என அக்கூட்டணியின் இடைக்கால தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அறிவித்துள்ளார். தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக டத்தோ ஶ்ரீ நஸ்ரி அசிஸின் நியமனம் செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, தெங்கு அட்னான்தான் இன்னமும் தலைமைச் செயலாளர் என முஹமட் ஹசான் கூறினார். எனவே தெங்கு அட்னான் தமது பதவியில் இருந்து விலகும் வரை அல்லது அவர் நீக்கப்படும் வரை தலைமைச் செயலாளர் பொறுப்பில் தொடர்வார் என முஹமட் ஹசான் தெரிவித்தார்.
தேசிய முன்னணியில் டத்தோ ஶ்ரீ நஸ்ரி அசிசின் தலைமைச் செயலாளர் பொறுப்பு, அக்கூட்டணியின் அமைப்பு விதிகளுக்கு ஏற்ப சட்டபூர்வமானது அல்ல என்பதையும் முஹமட் ஹசான் தெளிவுப்படுத்தினார். விடுமுறையில் செல்லும் முன்னர் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி , டத்தோ ஶ்ரீ நஸ்ரி அசிசை தலைமைச் செயலாளராக அறிவித்து சென்றார் என்பது குறிப்பிடதக்கது.


