ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அகில இங்கிலாந்து பேட்மின்டன் போட்டி; மலேசிய ஜோடி காலிறுதி ஆட்டத்திற்க்கு தேர்வு
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

அகில இங்கிலாந்து பேட்மின்டன் போட்டி; மலேசிய ஜோடி காலிறுதி ஆட்டத்திற்க்கு தேர்வு

லண்டன், மார்ச் 8-

அகில இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவின் இரட்டையர் ஆட்டக்காரர்களான வீ செம் – வீ  கீயோங் ஜோடி காலிறுதி ஆட்டத்ததிற்கு தகுதி பெற்றனர்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-18, 21-19 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகி எண்டோ-யுதா வாதனபே   ஜோடியை தோற்கடித்து காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்த மலேசிய ஜோடி எதிர்பார்க்கப்பட்டதை விட எளிதாக ஜப்பானிய ஆட்டக்காரர்களை வீழ்த்தினர்.

கோ வி சிம்- வீ கியோங்  ஜோடி இன்று இரவு நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பஜார் ஆசியான் – முகமட் ரியான் ஆர்டியோன் இனணயை சந்திப்பார்கள் . அவர்கள் 13 -21, 21 -19, 23-21 என்ற புள்ளி கணக்கில் சீனா விளையாட்டு வீரர்களை வீழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன