spot_img
12.7 C
London
spot_img
Home மலேசியா கல்வி மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக் கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்

மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக் கூட புதிய கட்டடத்திற்கு சிவநேசன், சிவகுமார் நிதி வழங்கினர்

0
782

ஈப்போ, மார்ச் 8-

இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய கட்டட நிதிக்கு அறிவித்தபடி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வெ. 50,000 மற்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் வெ. 20,000 வழங்கினர்.

இப்பள்ளிக் கூடம் வெ.35,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.

அதன் நிர்மாணிப்பு பணி நிதிப்  பிரச்சனையால் திட்டமிட்டப்படி நிறைவு செய்ய இயலாத காரணத்தால் பள்ளி நிர்வாகம் நிதி கோரிக்கையை முன் வைத்தது.

இப்பள்ளிக்கு வருகை புரிந்த மேல் குறிப்பிட்ட இருவரும் செய்த நிதி அறிவிப்பை இன்று  ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய சிவநேசன், பேரா மாநித்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் மாரியம்மாள் இங்கு நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டடத்தை நிறைவு செய்ய அரசாங்கம் மேலும் வெ. 13 லட்சத்து 50 ஆயிரத்தை  அங்கிகரித்துள்ள தகவலை அறிவித்தார்

இதன் வழி விரைவில் இப்பள்ளியின் புதிய கட்டடத்தின் பணி முழுமைப் பெற்று அதில் மாணவர்கள் கல்வியைத் தொடர்வார்கள் என்றார்.

இங்கு இந்த புதிய தமிழ்ப்பள்ளிக் கூடம் எழுப்ப பெரும் முயற்சியை மேற்கொண்ட மறைந்த டத்தோ ஹாஜி தஸ்லிமை நினைவுக் கூர்தார்.

இப்பள்ளிக்கு தேவைப்பட்ட நிதியை பெற உதவிகள் புரிந்த ஏ.சிவநேசன் மற்றும் வி. சிவகுமாருக்கும், பள்ளியின் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் , முன்னாள் மாணவர்கள் இயக்கம் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் எஸ்.சற்குணன் கலந்துக் கொண்டார் .