spot_img
15.2 C
London
spot_img
Home மலேசியா கல்வி நவீன்ராஜ் மாணவனின் மருத்துவ படிப்பிற்கு அபிராம் இயக்கம் நிதி வழங்கியது

நவீன்ராஜ் மாணவனின் மருத்துவ படிப்பிற்கு அபிராம் இயக்கம் நிதி வழங்கியது

0
308

ஈப்போ மார்ச் 9-

மருத்துவ படிப்பை முடிப்பதற்கு நிதி பிரச்சனையை எதிர்நோக்கிய ரா.நவீன்ராஜிற்க்கு அபிராம் இயக்கம் வெ.12,000 வழங்கியது.

இந்தோனோசியாவில் இறுதி ஆண்டு கல்வியை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் கல்வியைச் நிறைவு செய்ய வெ. 12,000 தேவைப்படுகிறது. அம்மாணவனின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் பொருட்டு மாநில அபிராம் சமுக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள எம்.எச். ஹோட்டலில் சிறப்பு விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் வழி சுமார் வெ. 12,000 நிதி திரட்டப்பட்டு அம்மாணவனிடம் ஒப்படைக்கப்பட்டது  என்று அபிராம் சமுக நல இயக்கத்தின் தேசியத் தலைவர் கி.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் பேசுகையில், அபிராம் இயக்கம் சமுக நல சேவையை கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. எங்களின் சேவையைக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த இயக்க நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் .

இந்த நிகழ்வில் அமைச்சர் குலசேகரன், ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் , புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பிரதிநிதிகள், ஈப்போ அருணகிரி நாதர் மன்றத்தின் தலைவர் டாக்டர் . வ.ஜெயபாலன், தித்திரு மாத்தாஜி, அமுசு. ஏகாம்பரம் ஆகியோர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர் .

நவீன்ராஜ் மருத்துவ படிப்பை நிதி உதவி வழங்க விரும்புவர்கள் மேல் விவரங்கள் அறிய விரும்புவர்கள் 012- 5908563 எனும் தொலைப் பேசி எனும் எண்ணுடன் தொடர்புக்கொள்ளலாம் என்று சண்முகம் கேட்டுக்கொண்டார் .