அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > குற்றம் செய்யேல் திரைப்படம் ரசிகர்களை கவரும்! தயாரிப்பாளர் குழு நம்பிக்கை
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

குற்றம் செய்யேல் திரைப்படம் ரசிகர்களை கவரும்! தயாரிப்பாளர் குழு நம்பிக்கை

கோலாலம்பூர், மார்ச் 11-

குற்றம் செய்யேல் திரைப்படம் மலேசிய ரசிகர்களை வெகுவாக கவரும் என தயாரிப்புக்குழு நம்புகின்றது. அண்மையில் இதன் முன்னோட்டக்காட்சி பெட்டாலும் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தை கண்ட மலேசிய கலைத் துறையைச் சார்ந்தவர்கள், திரைப்படத்தில் நகைச்சுவை அம்சங்கள் அதிகமாக இருப்பதாக கூறினார்கள்.

குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் எம்மாதிரியான விளைவுகளை எதிர்நோக்கக் கூடும் என்பது குறித்து இத்திரைப்படம் சித்தரிக்கின்றது. தவறான வழியில் நாம் செல்லும்போது நமது முடிவும் நிச்சயமாக அதைச் சார்ந்தே இருக்கும் என்பதை இத்திரைப்படம் உணர்த்துகின்றது.

முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ள இத்திரைப்படத்தில் வில்லனாக தமிழக திரைப்பட கலைஞர் போஸ் நடித்திருக்கின்றார். அவரோடு விஜய் டிவியின் கலைஞரான தீனா திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

கல்லூரி மாணவர்கள் குண்டர் கும்பல் நடவடிக்கை சார்ந்த விஷயங்களை சேகரிக்க வேண்டும் என்ற நடவடிக்கை அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதை முன்னிறுத்தி மலேசியாவில் முன்னணி குண்டர் கும்பல் தலைவராக இருக்கும் போஸ் இவர்கள் அணுகுகிறார்கள்.

அவரை சுட்டு வீழ்த்த வேண்டும் என காவல்துறை அதிகாரியும் காத்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் போது என்ன நேர்கிறது என்பது தான் திரைப்படத்தின் கதையோட்டம்.

இப்போது மலேசியாவில் உள்ள அனைத்து முதன்மை திரையரங்குகளிலும் இத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. மலேசியர்கள் இத்திரைப்படத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கும் பட்சத்தில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க தாம் தயாராக இருப்பதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் செல்வா கூறினார். அவர் இத்திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த பினாங்கு மாநில போலீஸ் படை முன்னாள் தலைவர் தெய்வீகன் குண்டர் கும்பல் நடவடிக்கையானது நமது வாழ்வாதாரத்தை பாதித்து விடும் என கூறினார். இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் அவர்.

இந்த முன்னோட்ட காட்சியில் பேரா மாநில போலீஸ் படையின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோ பரமசிவம், ஆஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன