புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வசதி குறைந்த மாணவர்களுக்கு பஸ் உதவித்தொகை: உடனடியாக விண்ணப்பம் செய்வீர்!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

வசதி குறைந்த மாணவர்களுக்கு பஸ் உதவித்தொகை: உடனடியாக விண்ணப்பம் செய்வீர்!

ரவாங், மார்ட் 11-

வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு மாதம்தோறும் 300 வெள்ளி பஸ் உதவித்தொகை வழங்க சிலாங்கூர் அரசு முன் வந்து இருக்கின்றது.

கடந்த ஆண்டு இந்த உதவித்தொகை ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தமுறை அந்த எண்ணிக்கை மூவாயிரத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தை தாம் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பிரச்சனையை எதிர்நோக்குவது தொடர்கதையாகி வந்தது. இது குறித்து பல பெற்றோர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள். இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்த்திடம் பஸ் உதவி தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன் வைத்து இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

குவாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரிடம் பள்ளியின் நில விவகாரம் குறித்து கணபதிராவ் கேட்டறிகிறார்

இந்நிலையில் கடந்த ஆண்டு பஸ் போக்குவரத்து உதவித் தொகை வழங்க மாநில அரசு முன்வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் எந்த தமிழ்ப்பள்ளியும் தங்கள் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு பஸ் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை இன்றளவும் முன் வைக்கவில்லை என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

நமக்கான சலுகைகள் வழங்கப்படும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முறை இந்த சலுகையை நாம் தவற விட்டால் இனி வரும் காலங்களில் இந்த நடைமுறையை செயல்படுத்துவது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் யார் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள் என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் குடும்ப பின்னணிப்பி40 பிரிவின் கீழ் இருந்தால், அவர்கள் இந்த உதவித்தொகைக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னதாக இந்த உதவித் தொகை நேரடியாக பெற்றோர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப் படுவதால், சில தமிழ்ப்பள்ளிகள் இதற்கு ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் என கணபதிராவ் குறிப்பிட்டார்.

டத்தோஶ்ரீ சுரேஷ் ராவ் ஏற்பாட்டில், ரவாங் சுற்றுவட்டாரத்தில் உள்ள, ரவாங் தமிழ்ப்பள்ளி, பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி, குவாங் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரடியாக வருகை புரிந்து நில பிரச்சனை குறித்து அறிந்து கொண்ட கணபதி ராவ் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பஸ் போக்குவரத்து உதவித்தொகை 300 வெள்ளி வழங்கப்படுகின்றது. இது வறுமையின் கோட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். அதனால் தமிழ்ப் பள்ளிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக ஆர்வம் காட்டி தங்களின் மாணவர்களை இத்திட்டத்தில் பதிய வேண்டும் என கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

One thought on “வசதி குறைந்த மாணவர்களுக்கு பஸ் உதவித்தொகை: உடனடியாக விண்ணப்பம் செய்வீர்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன