Homeஅரசியல்பக்காத்தான் அமைச்சர்களில் சிலர் புதியவர்களே!  -டாக்டர் மகாதீர் ஒப்புதல்

பக்காத்தான் அமைச்சர்களில் சிலர் புதியவர்களே!  -டாக்டர் மகாதீர் ஒப்புதல்

கோலாலம்பூர், மார்ச் 11-

பக்காத்தான் அமைச்சர்களில் சிலர் புதிதாகப் பதவியில் அமர்ந்தவர்கள். ஆகையால், நாட்டை நிர்வகிப்பதற்கு இக்கூட்டணிக்குக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டார்.

“உண்மையில், பக்காத்தானில் பலர் புதியவர்கள் என்பதை நான் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சில வேளைகளில் நாம் கூறும் கருத்துகள் நம்மைப் பற்றி தவறாகச் சித்தரிக்க க்கூடும்” என்றார் மகாதீர்.

“தேசிய முன்னணி 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆட்சி  புரிந்துள்ளது. ஆகையால், எங்களுக்கு நீங்கள் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும்”என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

“பாரிசானில் ஒவ்வொருவரும் நிபுணர் என்று கூறிவிட முடியாது. பிரதமர் உள்பட சிலர் அர்த்தமற்ற தவறுகளைச் செய்துள்ளனர்” என்று அவர் மேலும் விவரித்தார்.

பக்காத்தானில் கோமாளிகளையும், கேளி சித்திரக்காரர்களையும் களையெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று பிரதமரின் ஊடக மற்றும் தொடர்பு பிரிவு சிறப்பு ஆலோசகர் டத்தோ ஏ. காடிர் ஜாசின் கூறியதற்கு மகாதீர் இவ்விதம் பதிலளித்தார்.

spot_img

latest articles

explore more