அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கிம் ஜோங் நாம் கொலை வழக்கு: சித்தி அய்ஷா விடுதலை
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கிம் ஜோங் நாம் கொலை வழக்கு: சித்தி அய்ஷா விடுதலை

ஷா ஆலாம், மார்ச் 11-

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து  இந்தோனேசிய பெண் சித்தி அய்ஷாவை இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

சித்தி அய்ஷா மீதான  குற்றச்சாட்டை அரசு தரப்பு மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அப்பெண்ணை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அக்குற்றச்சாட்டில் இருந்து  விடுவித்தது.

கடந்த 2017 பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹோங்குடன் இணைந்து கிம் ஜோங் நாமின் முகத்தில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ரசாயனத்தைத் தெளித்ததாக சித்தி அய்ஷா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

“சித்தி அய்ஷா விடுதலை செய்யப்படுகிறார்” என்று இக்கொலைக் குற்றச்சாட்டைக் கைவிடும்படி அரசு தரப்பு செய்த விண்ணப்பத்தை அங்கீகரிக்கையில் நீதிபதி அஸ்மின் அரிஃபின் தெரிவித்தார்.

இவ்வழக்கை மீட்டுக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது இஸ்கந்தர் அகமது குறிப்பிடவில்லை.

“நீதிமன்றத்தின் முடிவில் நாங்கள் மனநிறைவு கொள்கிறோம். சித்தி அய்ஷாவை இன்று அல்லது மிக விரைவில் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்புவோம் ” என்று மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ருஸ்டி கிரானா செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன