ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சூப்பர் லீக் கால்பந்து போட்டி; அடுத்தடுத்த தோல்விகளால் பயிற்சியாளர் விலகல்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சூப்பர் லீக் கால்பந்து போட்டி; அடுத்தடுத்த தோல்விகளால் பயிற்சியாளர் விலகல்

கோலாலம்பூர் மார்ச் 12-

மலேசிய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அடுத்தடுத்து 5 ஆட்டங்களில் தோல்வி கண்டதை தொடர்ந்து கோலாலம்பூர் குழுவின்  பயிற்சியாளர்  யுஸ்ரி சே லா  விலகினார். இந்த கால்பந்து பருவ காலத்தில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய  முதல்  நபர் யுஸ்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அனைத்துலக ஆட்டக்காரரான அவர் கோலாலம்பூர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக பெரிய எதிர்பார்ப்போடு நியமிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை செராஸ் கால்பந்து விளையாட்டரங்கில் சிலாங்கூர்  குழுவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் தோல்வி கண்டதை தொடர்ந்து முன்னாள் அனைத்துலக ஆட்டக்காரரான யுஸ்ரி சே லா பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இதற்கு முன் பகாங் குழுவிடம் 1-3 என்ற கோல் கணக்கிலும், ஜொகூர் டாருல் தாஷிம் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கிலும், திரெங்கானுவிடம் 0-1 என்ற கோல் கணக்கிலும், மலாக்காவிடம் 0-2 என்ற கணக்கிலும் தோல்வி கண்ட கோலாலம்பூர் ஆக கடைசியாக சிலாங்கூர் அண்ணியிடமும் தோல்வி கண்டது.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஒரு புள்ளியை கூட பெறாத சூழ்நிலையில் கோலாலம்பூர் குழுவை மேலும் சங்கடத்தை விரும்பவில்லை என்பதால் பயிற்சியாளர்  பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்ததாக யுஸ்ரி கூறினார்.

இது எனது சொந்த முடிவு. மற்றவர்கள் தலையீடு  எதுவுமில்லையென அவர் தெரிவித்தார். தொடக்க கட்டத்திலேயே பலம்வாய்ந்த அணிகளுடன் மோதக் கூடிய சூழ்நிலை கோலாலம்பூர் குழுவிற்கு ஏற்பட்டது. கோலாலம்பூர் காற்பந்து குழுவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு  செய்ய முடியவில்லை என்ற கனத்த இதயத்தோடு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யுஸ்ரி சே லா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன