கோலாலம்பூர், மார்ச் 12-

மை கோப் எனப்படும் அனைத்துலக தன்னார்வ திட்டம் தென் கிழக்காசிய நாடுகளில் தொண்டூழிய பணியை மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது.

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள  இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

தகுதியுள்ள, திறன்மிக்க, அறிவாற்றல் நிறைந்த, தன்னார்வ சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளம் தலைவர்களை உருவாக்குவதே மே கோப்பின் தலையாய நோக்கம்.

 இத்திட்டம் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும்  40 மலேசிய இளைஞர்கள் தென் கிழக்காசியாவில் உள்ள 4 நாடுகளில் தொண்டூழிய சேவையில்  ஈடுபடுத்தப்படுவர்.

இந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்கு நன்மையளிக்கும் நீடித்த திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

மை கோப் தன்னார்வ திட்டத்தில் பங்கேற்பவர்கள் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய மலேசிய குடிமக்களாகஸஅஇருக்க வேண்டும்.

இவர்கள் இவ்வாண்டு ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை 3 மாதங்களுக்கு தொண்டூழிய பணியில் முழுமையாக ஈடுபட தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே வேளையில், இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் முஸ்லிம் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் நோன்பிருந்து பெருநாளைக் கொண்டாடலாம்.

மனிதநேய மற்றும் தன்னார்வ சேவைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

https://goo.gl/forms/RyPLnQBw2FUGPkwE2 form எனும் இணைய தளம் வழி இத்திட்டத்திற்கு  விண்ணப்பம் செய்யலாம். இறுதி நாள் மார்ச் 15 ஆகும்.