புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஆவணமில்லா விவகாரம்! காத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்க தயார்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஆவணமில்லா விவகாரம்! காத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்க தயார்!

ஈப்போ மார்ச் 12

நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் குடியுரிமை விவகாரம் நாடற்ற நிலை, பிறப்பு பத்திர விவகாரங்களுக்கும்  தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  டத்தோ என்.சிவசுப்பிரமணியம் நடப்பு அரசாங்கத்தில்  உள்ள இந்திய அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.

மேல் குறிப்பிட்ட  விவகாரங்களுக்கு தீர்வுக்காணவே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமலாக்க  பணிக்குழுவின் (எஸ்.ஐ.தி.எப்)  தேசிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன்.

கடந்த 2009 ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணிக்குழுவின் வழி இந்த விவகாரங்களுக்கு படிப்படியாக தீர்வுக்காணப்பட்டு வந்தது.

இதற்கிடையில்  பொதுத் தேர்தலின் பொது நாட்டிய நம்பிக்கை கூட்டணி ஆட்சியை பிடித்ததால்  இந்த விவகாரங்களுக்கெல்லாம் நூறு நாட்களில் இந்தப் பிரச்சசினைக்கு தீர்வு பிறந்துவிடும் என்று வாக்குறுதியை அள்ளி வீசினர்.

இது வரை இந்த விவகாரத்தில் நூறு நாட்களில் தீர்வுக்காணப்படவில்லை.

தேர்தலுக்கு முன்பு எஸ்.ஐ.தி.எப் . சுமார் 4,000 நபர்களின் குடியுரிமை தஸ்தாவேஜுகள் முறையான தஸ்தாவேஜூகளுடன் ஒப்படத்தோம். அவைகள் அங்கிகரிக்கவேண்டிய நடவடிக்கை  இந்திய அமைச்சர்கள் எடுக்கவேண்டும்.

அதற்கான (காத்திருப்போரின்) தஸ்வேஜூகள்(நகல்) தம்மிடமும் உள்ளது. தேவைப்பட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைக்க தயார் என்று தெரிவித்தார்.

இந்தியர்களின் அடையாள ஆவண விவகாரங்களுக்கு தீர்வுக்காண ம.இ.கா. நிறைவான சேவையை வழங்கியுள்ளது.

ஆக, தொடர்ந்து ஒருவருக்கொருவர் சாடுவதை நிறுத்திவிட்டு குறிப்பாக நடப்பு அரசாங்கத்தில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த அடையாள அவண விவகாரம் அதிகமாக பேரா மாநிலத்தில் தலைத் தூக்கியிருந்து. அதில் பல பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட்டது என்று இம்மாநில எஸ்.ஐ. தி.எப். பின் முன்னாள் தலைவர் எம் . நடராஜா கூறினார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன