ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் கார் களவு!  தேடும் வேட்டையில் போலீசார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் கார் களவு!  தேடும் வேட்டையில் போலீசார்

ஈப்போ, மார்ச் 13-

அரசாங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியத்தின் கார் களவாடப்பட்டுள்ளது.

பெர்டனா ரக காரான அதனை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று  மாநில அரசாங்க அலுவலகம் முன் (முன்னாள் சட்டமன்ற அலுவலகம்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் களவாடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அங்குள்ள தமது அலுவலத்திற்கு பிற்பகல் மூன்று மணியளவில் சென்றுவிட்டு பிற்பகல் 4.30 மணியவில் காருக்கு வந்தபோது அங்கு அது காணவில்லை.

 அரசாங்க அலுவலகத்தில் பாதுகாவலர்கள்  பணியில் இருந்தும் கார் களவாடப்படுகிறது என்றார் மற்றவர்களுகளுக்கும் அது உத்தரவாதமும் இல்லை என்றார் .

இதனை தாம் கடுமையாக கருதுவதாகவும் இந்த விவகாரத்தை மாநில அரசாங்க செயலாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வேன் தெரிவித்தார்

மாநில  முஸ்லிம் அல்லாதாருக்கான சமய விவகாரப் பிரிவு  ஒருங்கிணப்பாளராக  சிவசுப்பிரமணியம் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காரில் கோப்புகள் மேலும் தஸ்தாவேஜூகள் இருந்ததாக குறிப்பிட்ட சிவசுப்பிரமணியம், இது வரை கார் கண்டுபிடிக்கவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன