ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசிய விமான நிறுவனம் மூடப்படாது! -லிம் குவான் எங்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலேசிய விமான நிறுவனம் மூடப்படாது! -லிம் குவான் எங்

கோலாலம்பூர், மார்ச் 13-

மலேசிய விமான நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் உறுதியளித்தார்.

இந்த தேசிய விமான நிறுவனம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டதாக குவான் எங் குறிப்பிட்டார்.

“முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் எனது பிரதமரிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. மலேசிய விமான நிறுவனம் குறித்த பல்வேறு தேர்வுகளைப் பற்றியே டாக்டர் மகாதீர் பேசினாரே தவிர இந்நிறுவனத்தை மூடிவிடுவதாக அவர் சொல்லவில்லை” என்று மலேசிய மேம்பாட்டு வங்கியின் 1 பில்லியன் வெள்ளி  நீடித்த மேம்பாட்டு நிதியைத் தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய விமான நிறுவனத்தை மூடுவது உட்பட சில வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

மலேசிய விமான நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டில்  தனியார்மயமாக்கப்பட்டது முதல் இந்நிறுவனம்  தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இது குறித்து அரசாங்கம் விவாதித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன