வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > 11  குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை ரத்து -ஹனிபா மைடின்
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

11  குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை ரத்து -ஹனிபா மைடின்

கோலாலம்பூர், மார்ச் 13-

பதினொரு குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனையை அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் முகமது ஹனிபா  மைடின்  தெரிவித்தார்.

இவற்றில் ஒன்பது குற்றவியல் சட்டத்தையும் இரண்டு 1971 ஆம் ஆண்டு ஆயுத சட்டத்தையும் (கூடுதல் அபராதம்) உட்படுத்தியவை என்று துணையமைச்சர் கூறினார்.

” குற்றவியல் சட்டம் மற்றும் ஆயுத சட்டத்தில்  (கூடுதல் அபராதம்) வரையறுக்கப்பட்ட கட்டாய மரண தண்டனைக்குப் பதிலாக   நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு மரண தண்டனை விதிக்க அரசாங்கம்  பரிந்துரை செய்யும்” என்று மக்களவையில் தும்பாட் பாஸ் உறுப்பினர் டத்தோ சே அப்துல்லா மாட் நாவியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 9 குற்றங்களில் பிரிவு 121 ஏ (மாட்சிமை தங்கிய மாமன்னர், ஆட்சியாளர் அல்லது மாநில ஆளுநர் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள்), பிரிவு 130 சி(பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது), பிரிவு 130 ஐ(பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக்  கட்டளையிடுதல்), பிரிவு 130 என் (பயங்கரவாத நடவடிக்கைகளுக்குச் சொத்துகளைச் சேகரித்தல் அல்லது வழங்குதல்) ஆகியன அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 27 வாக்குறுதிகளில் ஒன்றே இந்நடவடிக்கை என்பதை துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன