ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கத் தேர்தல்; டத்தோ அமாலுடின் தலைவரானார் 
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கத் தேர்தல்; டத்தோ அமாலுடின் தலைவரானார் 

ஈப்போ, மார்ச் 13-

பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவராக டத்தோ அமாலுடின் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டார்.

அதன் துணைத் தலைராக டாக்டர் நடராஜா,  உதவித் தலைவர்களாக இந்திரன், ஸ்டீவன் மற்றும் ராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அச்சங்கத்தின் செயலாளராக முனியாண்டி, பொருளாளராக தினாகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த சங்கத்தின் தேர்தல் இங்குள்ள டவர் ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் நிர்வாக உறுப்பினராக வரதராஜு, சண்முகம், லிங்கேஸ்வரன் , லிங்கம் தேர்வு செய்யப்பட்ட வேளையில் கலை மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரும் கணக்காய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறையில் சேவையாற்றியவர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன