ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > அதிமுக கூட்டணியில் இணைந்தது த.மா.கா
இந்தியா/ ஈழம்

அதிமுக கூட்டணியில் இணைந்தது த.மா.கா

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் கையொப்பமிட்டனர்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.

இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன