ரவாங், ஏப்ரல் 26-

ரவாங், உலு சிலாங்கூர் பகுதியில் மருத்துவச் சேவைக்கு மிகவும் பிரபலம் பெற்ற கிளினிக்குகளில் ஒன்றான எஸ்பி கேர் கிளினிக்கின் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலு சிலாங்கூர் சுங்கை சோவில் அமைந்துள்ள எஸ்பி கேர் கிளினிக் வளாகத்தில் நடைபெறவிருக்கும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்கு பொதுமக்கள் அழைக்கப்படுவதாக எஸ்பி கேர் குழுமத் தலைவர் டாக்டர் சத்தியப்பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

ஆண்டுதோறும் இது போன்ற சிறந்த மருத்துவ நடவடிக்கைகளை எஸ்பி கேர் குழுமம் தம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இம்முறை குறைந்தபட்சம் 500 பொதுமக்களாவது பயன்பெறும் அளவுக்கு இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் உடலில் இருக்கின்ற அனைத்து உறுப்புகள் குறித்தும் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறிப்பாக நுரையீரல், இருதயம், கண், காது உட்பட எல்லா உறுப்புகளுக்கும் சோதனை நடத்தப்படவிருக்கிறது.

இதை தவிர்த்து ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட எல்லா நோய்களுக்கும் சோதனை நடத்தப்படும். இந்த முகாமில் ஒரு ஆம்புலன்ஸ் பற்றி முழுமையான விளக்கமும் அதைத் தவிர்த்து நோய்வாய்ப்பட்டவருக்கு உடனடி முதலுதவி வழங்குவது எப்படி என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எஸ்பி கேர் குழுமத்தைச் சேர்ந்த 100 மருத்துவ அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவர். தொடர்புக்கு: 019-6469891.