செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டத்தோஶ்ரீ அன்வார் தலைமையில் இன்கோட் திறன் பேசி செயலி அறிமுக விழா!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

டத்தோஶ்ரீ அன்வார் தலைமையில் இன்கோட் திறன் பேசி செயலி அறிமுக விழா!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1-

இன்கோட் எனப்படுவது மலேசிய இந்தியர் ஒருங்கிணைப்பு சிந்தனைக் களஞ்சியம் உள்ளடக்கிய ஒரு குழுமம் ஆகும். இவ்வமைப்பில் அங்கம் வகிப்போர் இடையே உறவை வலுப்படுத்துவதோடு பி கே ஆர் தலைமைத்துவத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் வழி மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே இவ்அமைப்பு உருவாக்கப்பட்டது.

பிகேஆரில் அங்கம் வகிக்கும் இந்திய உறுப்பினர்களின் உறவை வலுப்படுத்துவதற்காக மக்கள் குரல் எனும் தொலைபேசி திறன் பயன்பாடு உருவாக்குவது இந்தியர் ஒருங்கிணைப்பு சிந்தனைக் களஞ்சியம் முக்கிய திட்டங்களில் ஒன்றாக மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்வழி பெறப்படும் தகவல்கள் பிகேஆரின் நிலைத்தன்மை பெருமளவில் பயன்படும். மேலும் இத்தகவல்கள் மலேசிய இந்தியர்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பிற இந்தியர்கள் சார்ந்த பயன்படும் நோக்கில் திட்டங்களைத் தீட்டவும் அமல்படுத்தவும் சிந்தனைக் களஞ்சியம் மிகவும் உதவியாக விளங்கும்.

இந்த செயலியை பயன்படுத்தி மலேசிய இந்தியர்கள் தங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பதிவேற்றம் செய்யலாம். மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான செயல் திட்டங்களையும் இந்த செயலி மூலம் நாம் முன்னெடுப்போம் என இதன் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மனோகரன் கூறினார்.

அதோடு இந்த செயலி இந்தியர்களுக்காக அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் அங்கத்தினர்கள் அறிவதோடு ஆர்வமுடையோர் அவற்றில் பங்கேற்கவும் வழிவகுக்கும். அதில் இந்த செயலி ஆர்வமுள்ள மலேசிய இந்தியர்களுக்கு பயன்பாட்டு களஞ்சியமாக விளங்கும் என அவர் மேலும் கூறினார்.

மிகப்பெரிய பயனைத் தரவல்ல இந்த செயலி உருவாக்குவதற்கு மிகப்பெரிய பொருளாதார பலம் தேவைப்பட்டது அதற்கு பிகேஆர் கட்சியின் தலைவர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறினார். இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த செயலியாக இது செயல்படும். இதன் திறப்பு விழாவில் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்துகொள்கிறார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி ஷாஆலம் இளைஞர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இதன் அறிமுக விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன