திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்க அறிக்கையால் அதிர்ச்சி!- -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்க அறிக்கையால் அதிர்ச்சி!- -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஆகஸ்ட் 2-

மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்கத் தலைவர் முனைவர் முகமட் மோகன், மித்ரா தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கை வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறையின்கீழ் இயங்கும் ஒரு சிறு அமைப்பான் மித்ரா தொடர்பில் சில உண்மைத் தகவலை முகமட் மோகன் புறக்கணித்திருக்க வேண்டும்; அல்லது அவருக்குக் கிடைத்த தகவலைப் பற்றிய உண்மை நிலையை சரிபார்க்கத் தவறி இருக்க வேண்டும். மித்ரா, நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ள அங்கீகாரம் இல்லாத நிலையில், தன் பங்களிப்பை அரசுசார் அல்லது அரசுசாரா பொது அமைப்பின் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும். இப்படிப்பட்ட நிலையில், பெயர்பெற்ற அமைப்பான மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்கம், தனக்குக் கிடைத்தத் தகவலை சரிபார்த்திருக்க வேண்டும்; அல்லது மித்ரா அதிகாரில் ஒருவரைத் தொடர்பு கோண்டு உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும்.

இந்திய சமுதாயத்தின்பால் மித்ரா கொண்டிருக்கும் இலக்கின் அடிப்படையில் கல்வி மற்றும் பயிற்சி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு, அடையாளம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய தளங்களை வகுத்து அதன்படி செயல்படுகிறது. ( https://www.mitra.gov.my/ ) மொத்தமாக 28 பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்கும் மித்ரா சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்கள், வேலை வாய்ப்பு வழங்குவோர், பலதரப்பட்ட அரசுசாரா அமைப்புகள், சமூக மையங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் இணைந்து ‘சமுதாய உருமாற்றம்’ என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

பன்னாட்டு அளவில் தலங்களைக் கொண்டிருக்கும் சீகேட்(Seagate,), மைக்ரோசொஃப்ட், ஹுவாவெய்(Huawei), பேனாசோனிக் உள்ளிட்ட நிறுவங்-களுடன் இணைந்து பரந்த அளவில் மித்ரா செயல்பட்டு வருகிறது.

மித்ரா மேற்கொள்ளும் திட்டங்கள், மானியங்களைப் பெற்றவர்களின் தகவல் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் இணையப் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவேற்றப்படுகின்றன. மித்ராவிடம் இருந்து மானியம் பெற்றவர்கள் பெரும்பாலும் இப்பொழுதுதான் தங்கள் திட்டங்களைத் தொடங்கி இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினர், தாங்கள் மேற்கொள்ளும் திட்டத்தின் பயன் அல்லது பயனடைந்தவர்களின் விவரத்தை அளித்தால்தான் அடுத்தக்கட்ட நிதி பரிவர்த்தனை இடம்பெறும். அத்துடன், மித்ராவும் தன் பங்கிற்கு அனைத்து அமைப்புகளையும் கண்காணித்துதான் வருகிறது.

நம்பிக்கை கூட்டணி அரசின் கொள்கை முடிவுற்கு ஏற்ப அனைத்தும் நடைமுறைகளும் வெளிப்படையாகத்தான் நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்கம், மித்ரா-வின் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை யென்று பொத்தாம் பொதுவாக அறிக்கை விட்டிருப்பது அதன் பொறுப்பற்ற தன்மையையும் எதையும் முழுமையாக அறிந்து செயபட வேண்டும் என்ற கடப்பாடு இல்லாத்தையும் காட்டுகிறது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன