வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பாரம்பரிய தொழில்களைச் செய்ய மலேசியர்கள் தயாராக இருக்கிறார்களா? – குணசீலன் ராஜு கேள்வி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பாரம்பரிய தொழில்களைச் செய்ய மலேசியர்கள் தயாராக இருக்கிறார்களா? – குணசீலன் ராஜு கேள்வி

கோலாலம்பூர் ஆகஸ்ட் 11-

இந்தியர்களின் பாரம்பரிய தொழிலாக இருக்கும் சலவைத்தொழில். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், பொற்கொல்லர் துறைகளில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இந்த 4 தொழில்களிலும் பணியாற்றுவதற்கு மலேசியர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை இந்த அரசு அறிந்து இருக்கிறதா? என்ற கேள்வியை மலேசிய இந்திய காங்கிரஸ் மத்திய செயலவை உறுப்பினர் குணாளன் ராஜு முன்வைத்தார்.

எனது முதல் எண்ணம் என்னவென்றால் இந்த தொழில்கள் அனைத்தும் முக்கியமாக இந்திய வணிகர்களால் நடத்தப்படுகின்றனவா அல்லது நிர்வாகிக்கபடுகின்றனவா என்பதை அரசு ஆராய்ந்து உள்ளதா என்பதுதான். இந்த 4 தொழில்களை பொருத்தவரை மலேசியர்கள் இத்தொழில் துறைகளில் வேலை செய்வதற்கு விருப்பம் காட்டுவதில்லை என்பதை இத்தொழிலை முன்னெடுத்துவரும் முதலாளிமார்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இச்சூழ்நிலையில் மலேசியர்களை கொண்டு இந்த தொழில்களை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியையும் குணசீலன் முன்வைத்தார். அமைச்சரவையில் உள்ள 4 இந்திய அமைச்சர்கள் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்களா என்பதுதான் சமுதாயத்தின் மத்தியில் எழும் மிகப்பெரிய சந்தேகமாக இருக்கின்றது. குறிப்பாக இம்மாதிரியான நடவடிக்கைகளின் மூலம் இந்திய சமுதாயம் பின்னோக்கி செல்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மலேசியாவில் முதன்மை தொழில் துறைகளாக விளங்கும் இந்த 4 தொழில்களுக்கு அந்நிய தொழிலாளர்களை தருவிக்க முடியாது என்றால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு விகிதம், பரிமாற்ற விகிதம், நிலுவைத்தொகை போன்றவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட்டிருப்பதால் அவர்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் நடவடிக்கையாகவே தாம் இதை பார்ப்பதாக குணசீலன் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் இந்த புதிய கொள்கையை நிறைவேற்றுவதற்கான சரியான திட்டத்தை உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் ஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு தொழிலாளர்கள் இல்லை என்றால் அவர்களின் வேலையை செய்வதற்கு மலேசியர்கள் தயாராக உள்ளார்களா? இந்த தொழில்களை செய்வதற்கு மலேசியர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்? என்பதை ஆராய வேண்டும்.

இதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்நடவடிக்கையை தொடர்ந்தால் இந்த தொழில்களை மேற்கொள்ளும் மலேசியர்கள் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்வார்கள் என்றும் குணசீலன் கூறினார்.

குறிப்பிட்ட 4 தொழில்களிலும் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டு வருகிறது. அதன் முதலாளிமார்கள் அத்தொழில்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்துதான் அரசு முதலில் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு தொடர்ந்து இன்னல்களை வழங்கக் கூடாது என குணசீலன் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன