புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மூன்று மடங்கு சுமையோடு பிரதமர் பதவியில் இருக்கிறேன்! -துன் டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மூன்று மடங்கு சுமையோடு பிரதமர் பதவியில் இருக்கிறேன்! -துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் ஆக 11-

இம்முறை தமது பிரதமர் பணியின்பொறுப்பு மூன்று மடங்கு சுமையாக இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மலேசியாவின் நான்காவது பிரதமராக டாக்டர் மகாதீர் பதவியில் இருந்துள்ளார்.

முன்பு முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்ற போது நாட்டின் நிர்வாகமும் நிதி நிலையும் தூய்மையாகவும் சீராகவும் இருந்தன. அப்போது நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான துன் டாக்டர் மகாதீர் மலேசியாவில் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றார். நிர்வாகம் தூய்மையற்ற நிலையில் இருந்ததோடு அதிகமானோர் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட நிலையில்தான் தாம் இம்முறை நாட்டின் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற பெரிய அளவிலான கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை நியாயமான முறையில் முதலீடு செய்திருந்தால் அவற்றை திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால் அப்பணம் மறைந்து விட்டது. இது எங்களுக்கு பெரிய சுமையாகும் என்றார் அவர்.

இம்முறை மூன்று மடங்கு எனக்கு மிகப்பெரிய சுமையாக பிரதமர் பொறுப்பு இருக்கிறது. எனக்கு 94 வயதாகிவிட்டது. நான் வேகமாக செயல்பட வேண்டியிருக்கிறது. பதவி விலகி விடுவேன் என்ற வாக்குறுதியை வழங்கி இருப்பதால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியுள்ளது.எனவே எனக்கு மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

எட்டு ஆண்டுகள் அல்லது பத்தாண்டுகளில்முடிக்க வேண்டிய பணிகளை நான் விரைவாக முடிக்க வேண்டும். நான் வேகமாக செயல்பட வேண்டும் என இந்தோனேசிய ஊடகவியலாளருக்கு வழங்கிய பேட்டியில் துன் டாக்டர் மகாதீர் இதனை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன