வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ‘நமது காடுகள் கண்காட்சி’ மலேசியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அழைப்பு
சமூகம்முதன்மைச் செய்திகள்

‘நமது காடுகள் கண்காட்சி’ மலேசியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அழைப்பு

புத்ராஜெயா ஆகஸ்ட் 11-

மலேசியாவில் உள்ள எழில் கொஞ்சும் காடுகளின் அழகை மலேசியர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘நமது காடுகள்’ எனும் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது. இந்த கண்காட்சியில் மலேசியர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வரை தலைநகரில் உள்ள கோலாலம்பூர் கோபுரத்தில் இந்த கண்காட்சியை நடைபெறவிருக்கின்றது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசமாகவே நடைபெறும் இந்த கண்காட்சியில் மலேசியர்கள் திரளாக கலந்துகொண்டு மலேசியாவில் உள்ள காடுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

‘மலாயாப் புலியை பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரத்திற்கு முன்னதாகவே காடுகள் குறித்த விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் நீர், நிலம், இயற்கை வள அமைச்சு முனைப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு அழகு சேர்ப்பது காடுகள் தான். அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மலேசியர்களும் உண்டு. அதேநேரத்தில் மலேசியாவில் புகழ்பெற்ற காடுகள் எவை என்பதை அறிந்து கொள்ள  இந்த கண்காட்சியில் அனைவரும் பங்கு பெற வேண்டும்.

இந்த கண்காட்சியில் மலேசியாவில் புகழ்பெற்ற அனைத்து காடுகளின் விவரங்களும் இடம்பெறும். இயற்கையை விரும்பிகளுக்காக இந்த கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு விழிப்புணர்வைப் பெற வேண்டுமென டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன