ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது

ஈப்போ, ஆக 17-

இங்குள்ள கம்போங் டூசுன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலுள்ள சிலைகளை உடைத்து சேதப்படுத்திய இந்தோனேசிய ஆடவனை போலீஸ் கைது செய்தது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஆலயத்தில் நுழைந்த நபர் 15 சிலைகளை சேதப்படுத்தியிருப்பதாகவும் போலீஸ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலய தலைவர் தனபாலன் த/பெ மீனாட்சி சுந்தரம் புகார் செய்துள்ளார்.

இதனிடையே, அதிகாலை 4.15 மணியளவில் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் போலீசார் அந்த இந்தோனேசிய ஆடவனை கைது செய்துள்ளனர். 25 வயதுடைய அந்த ஆடவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் ஆலயத்திற்கு வந்து நிலவரத்தை கண்டறிந்தனர். ஆலயத்திற்கு வேண்டிய உதவிகளை அரசாங்கம் செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன