செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கில் 70 % உணவகங்கள் முதல் தர அந்தஸ்தைப் பெறும்..!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் 70 % உணவகங்கள் முதல் தர அந்தஸ்தைப் பெறும்..!

ஜோர்ஜ்டவுன்,  ஆக 19

2020 ஆம் ஆண்டிற்குள் பினாங்கு மாநிலத்தில் உள்ள 70 விழுக்காடு உணவகங்கள் தூய்மை நிலையில் GRED’A’ எனும் முதல் தர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்திலுள்ள உணவகங்களின் தூய்மையை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் செபராங் பிறை மற்றும் பினாங்கு மாநகராண்மைக் கழகங்கள் தீவிரம் காட்டுவதற்கு பணிக்கப்பட்டிருப்பதால் அதன் இலக்கு ஈடேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளன.

தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 4 அம்ச கொள்கையின் அடிப்படையில் இங்கிருக்கும் அனைத்து உணவகங்களும் தரமான முறையில் செயல்படுவதற்கு கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உணவக நடத்துனர்களுக்கு தொடர் உற்சாகம் வழங்கப்பட்டாதாகவும் ஜெகதீப் சிங் கூறினார்.

உணவகங்களுக்கு எதிரான தொடர் சோதனை நடவடிக்கைகளும் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தூய்மை நிலையைப் பேணி வருவது பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டு அது திருப்தியான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், 2020ஆம் ஆண்டிற்கான முதல் தர அந்தஸ்து இலக்கு வெற்றியடைவதில் எவ்வித ஐயமில்லை என்றும் ஜெகதீப் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மாநிலத்திலுள்ள உணவகங்களில் தூய்மை குறித்த அச்சமும் சந்தேகமும் இன்றி பொது மக்கள் அங்கு தூய்மையான நிலையில் உணவை உண்பதற்கான  அனைத்து வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில், தூய்மையைப் பேணாத உணவகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பின்னர் அவற்றுக்கு கட்டம் கட்டமாக அவகாசம் வழங்கப்பட்டு அவற்றின் தூய்மைத் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட ஜெகதீப், உணவக நடத்துனர்களுக்கு எதிரான கடும் நிபந்தனைகளும் அறிவுரைகளும் அவர்களை நல்வழிப்பதியாகவும் அவர் குறிப்பிட்டார்.

தூய்மையற்ற உணவக உரிமையாளர்களுக்கு தகுந்த முறையில் பயிற்சியளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதால், பலர் இதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொண்டதாகவும், தொடர் சோதனைகளும் அடுத்தடுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளும் உணவக உரிமையாளர்கள் பயனடையச் செய்திருப்பதாகவும் ஜெகதீப் விளக்கமளித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் பினாங்கு மாநில அதிகாரிகளின் விவரத்தின் பேரில் இங்கிருக்கும் ஆயிரத்து 381 உணவகங்கள் முறையான அனுமதியுடன் நடைபெற்று வருவதுடன், இதே போன்று பெரு நிலத்தில் 2 ஆயிரத்து 141 உணவகங்கள் முறையான அனுமதியுடன் செயல்படுவதாகும் அவர் கூறினார்.

அதோடு, இந்த உணவகங்கள் யாவும் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என்ற அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டதாகவும் ஜெகதீப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன