செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாகிர் நாய்க் வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார் – துன் டாக்டர் மகாதீர்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாய்க் வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார் – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஆக 18-

சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாகிர் நாய்க் வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அவர் மலேசியர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து இன ரீதியிலான உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது என மகாதீர் சுட்டிக் காட்டினார்.

வெளிநாட்டினர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட சலுகையை மீறி டாக்டர் ஜாகிர் நாய்க் செயல்பட்டிருக்கிறார் என லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

ஜாகிர் நாய்க்கிற்கு நிரந்தர குடியிருப்பு தகுதியை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இந்தியர்களுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் போலீசார் ஜாகிர் நாய்க்கிற்கு எதிராக விசாரணையை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே, ஜாகிர் நாய்க்கிற்கு யார் நிரந்தர குடியிருப்பு தகுதியை வழங்கியது என்று எனக்கு தெரியாது. ஆனால், நிரந்தர குடியிருப்பு தகுதியை பெற்றவர்கள் அரசியலில் பங்கேற்க முடியாது என பிரதமர் தெரிவித்தார்.

மேலும் சீனர்களை நாட்டிலிருந்து வெளியேருங்கள் எனக் கூறுயிருப்பதும் அவர் இன அரசியல் விளையாட்டை உரையாடுவதை பார்க்க முடிகிறது என மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன