Homeகலை உலகம்மதுமிதா ஏன் வெளியேற்றப்பட்டார்?

மதுமிதா ஏன் வெளியேற்றப்பட்டார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்மைய சர்ச்சையான மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து பல்வேறு காரணங்கள், பல்வேறான வதந்திகள், விமர்சனங்கள், கருத்துகள் சமூக ஊடங்களில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன. அது குறித்து அநேகன் மேற்கொண்ட ஓர் அலசல்…

தமிழச்சி என்று ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவுக்கு ஈடுகொடுத்ததால் ரசிகர்களைக் கவர்ந்தார். பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்டில் அந்த வீட்டில் அத்தனை பொறுத்தமாய் நடித்து கைத்தட்டு பெற்று மனம் கவர்ந்தார். யார் வம்புக்கும் போகாமல் இருந்து பிடித்தவர் பட்டியலில் சேர்ந்துக்கொண்டார்.

ஆனால் கோபம் என்று வரும் போது சுனாமி போல பொங்கி எழுந்து மீண்டும் அடங்கி போவார். அதுவே அவருக்கு மிகப்பெரிய மைனஸ் ஆகிப் போனது. இந்நிலையில் இந்த வாரம் அபிராமி தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாலேயே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், முன்னதாக, சேரனும் மதுமிதாவும் பேசிக்கொண்டிருக்கையில், நீச்சல் குளத்தில் நீர் இல்லாத காரணம் மற்றும், தமிழ்நாட்டில் நீர் பஞ்சம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ”வருண பகவானும் கர்நாடககாரறோ, தமிழ் நாட்டிற்கு நீர் கொடுக்காமல் இருக்கின்றார்” என்று மதுமிதா கூறியிருக்கின்றார். அங்கிருந்தே முதலில் ஷரினுக்கும் மதுவுக்கும் பிரச்சனை தொடங்கியதாம்.

அதேவேளையில், ஹெலொ ஆப் டாஸ்க்கில், தமிழ்நாட்டின் நீர் பிரச்சனையைக் குறித்து பதிவு செய்து, மக்களின் மனதில் இடம்பிடிக்க மதுமிதா வியூகம் வகுத்து அதனை பேசியதால் அங்கிருந்து பூகம்பம் கிளம்பியதாம்.

வார இறுதியில் மக்களின் ஓட்டைப் பெற ஏன் இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று வனிதா கூறியதாகவும், வீட்டில் உள்ளவர்கள் ஷரீனுக்கு ஆதரவாக பேசியதுடன், பெரும்பாலான போட்டியாளர்கள் தனக்கு எதிராக திரும்பியதால், தான் கூறிய கருத்தை நிரூபிக்க அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொண்ட சமயத்தில் இதை ஒளிபரப்ப முடியாது என்றும், ஹலோ ஆப்பில் தனது பதிவை மாற்றுமாறும் பிக்பாஸ் மதுவிதாவிடம் வலியுறுத்தியுள்ளார். அதையும் மீறி தனது கருத்தில் உறுதியாக நின்றதால் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆக, என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்த விவகாரம் குறித்து, விஜய்டிவியுடன் எம்மாதிரியான ஒப்பந்தத்தை மதுமிதா கொண்டிருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாத பட்சத்தில், இதில் என்ன உண்மை ஒளிந்துள்ளது என்பதை காலம் தான் பின்னாளில் பதில் சொல்லும்.

spot_img

latest articles

explore more