செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > கோலாலம்பூரைத் தனித்தன்மை வாய்ந்த பெலித்துங் சொர்க்க தீவோடு இணைக்கிறது ஏர்ஏசியா
உலகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூரைத் தனித்தன்மை வாய்ந்த பெலித்துங் சொர்க்க தீவோடு இணைக்கிறது ஏர்ஏசியா

சிப்பாங்,  ஆகஸ்ட் 20-

கோலாலம்பூரை இந்தோனேசியா, கிழக்கு கடற்கரை சுமத்ராவில் இருக்கும் சொர்க்க தீவான பெலித்துங்கை இணைக்கும் புதிய பயணத் தலத்தை ஏர்ஏசியா இன்று அறிமுகப்படுத்தியது. பெலித்துங் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் முதல் விமான நிறுவனமாக ஏர்ஏசியா விழங்குகிறது. வருகிற 2 அக்டோபர் தொடங்கி, ஏர்ஏசியா வாரம் நான்கு முறை இத்தளத்திற்கு நேரடியாகப் பயணிக்கும்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய தீவுகளால் சூழப்பட்டிருக்கும் பெலித்துங், அழகிய கடற்கரைகள் மற்றும் தெளிவான நீரைக் கொண்டுள்ளது. இவை, பயணிகளுக்குப் பல்வேறு நீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுப்பதோடு அலாதியான இயற்கை அழகை இரசிக்கும் ஒரு பயண அனுபவத்தையும் வழங்கும்.

ஏர்ஏசியா பிராந்திய வணிகத் தலைவர் அமண்டா வூ கூறுகையில், ” பாலி, லோம்போக் தவிர அதிகமான சலுகைகளை இந்தோனேசியா கொண்டுள்ளது. பெலித்துங், இதுவரை யாரும் கண்டிராத ஓர் அழகான வளப்பமானத் தளமாகும். இந்த புதிய நேரடி பயண சேவையின் வழி அதிகமான மக்கள் இவ்வற்புதமான சுற்றுலாத்தலத்தை வலம் வர இயலும் என நம்புகிறோம். இந்தோனேசிய அரசாங்கத்தின் 10 முன்னுரிமை வாய்ந்த சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் கடப்பாட்டிற்கு ஏர்ஏசியாவின் அயராத ஆதரவிற்கு இந்நடவடிக்கை ஒரு சான்றாக.”

இப்புதிய வழியைக் கொண்டாட, அனைத்து சிறப்பு உறுப்பினர்களுக்கும் ஏர்ஏசியா, குறைந்த விலைக் கட்டணமாக கோலாலம்பூரிலிருந்து பெலித்துங் செல்ல RM79-ஐ மட்டுமே விதிக்கிறது. இந்த சிறப்பு கட்டணங்களை அனுபவிக்க உங்கள் பயண டிக்கெட்டுகளை இன்று முதல் 25 ஆகஸ்ட் வரை airasia.com அல்லது ஏர்ஏசியா மொபைல் புலனத்தின் வழி முன்பதிவு செய்யுங்கள். BigPay புலனம் வாயிலாக பணம் செலுத்தும் ஏர்ஏசியா BIG உறுப்பினர்களுக்குச் செயலாக்க கட்டணம் விதிக்கப்படாது.

இப்புதிய வழியைக் கொண்டாட, அனைத்து சிறப்பு உறுப்பினர்களுக்கும் ஏர்ஏசியா, குறைந்த விலைக் கட்டணமாக கோலாலம்பூரிலிருந்து பெலித்துங் செல்ல RM79-ஐ மட்டுமே விதிக்கிறது. இந்த சிறப்பு கட்டணங்களை அனுபவிக்க உங்கள் பயண டிக்கெட்டுகளை இன்று முதல் 25 ஆகஸ்ட் வரை airasia.com அல்லது ஏர்ஏசியா மொபைல் புலனத்தின் வழி முன்பதிவு செய்யுங்கள். BigPay புலனம் வாயிலாக பணம் செலுத்தும் ஏர்ஏசியா BIG உறுப்பினர்களுக்குச் செயலாக்க கட்டணம் விதிக்கப்படாது.

வெள்ளை மணல் கொண்ட கடற்கரைகள் சூழ்ந்த தீவுகளுக்குப் பெயர் பெற்றவை பாசீர் தீவு, பாத்து புருங் கருடா தீவு, லீபோங் தீவு மற்றும் பாத்து பெர்லாயார் ஆகியவை பெலித்துங்கைச் சுற்றியுள்ள மிகவும் பிரபலமான தலங்களாகும். மேலும், பயணிகள் தனித்தன்மை வாய்ந்த இயற்கை காட்சிகளைக் கொண்ட இடங்களான கெலாயாங் கேவ், கெலாப்பா கம்பிட் ஒபென் பிட், கெப்பாயாங் ஆமை பாதுகாப்பு தீவு அல்லது குரோக் பெரயெ நீர்வீழ்ச்சியாயும் அனுபவிக்கலாம். புகைப்பட ஆர்வலர்கள் நீர் நில மற்றும் வெள்ளை கனிம வளங்களைக் கொண்ட அழகியான ஏரியான டானாவ் கவொலின் அல்லது வானவில் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் இலக்கிய அருங்காட்சியகமான மியூசியம் கட்டா ஆன்றியா ஹிராட்டாவுக்குச் செல்ல வேண்டும்.

இப்புதிய தலம் தவிர, ஏர்ஏசியா இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பெலித்திங் தீவிற்குத் தினசரி பயணத்தை வருகிற 1 அக்டோபர் 2019-லிருந்து தொடங்குகிறது. தற்சமயம், ஏர்ஏசியா கோலாலம்பூரை இந்தோனேசியாவின் 14 தலங்களுடன் இணைக்கிறது – ஜகார்த்தா, சுராபாயா, மேடான், பாலி, லோம்போக், யோக்ஜகார்த்தா, பெகான் பாரு, பொந்தியானாக், பாடாங் பலேம்பாங், செமாராங், மக்கசார், பண்டூங் மற்றும் பண்டா ஆச்சே.

ஏர்ஏசியாவின் அண்மைய செய்திகள், நடவடிக்கைகள் மற்றும் விளம்பரங்களுக்கு ட்விட்டர் (twitter.com/AirAsia), Facebook (facebook.com/AirAsia) மற்றும் Instagram (instagram.com/AirAsia) ஆகியவற்றை வலம் வாருங்கள். * அனைத்து கட்டண சலுகைகளும் ஏர்ஏசியா BIG உறுப்பினர்களுக்கு மட்டுமே. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒரு வழி பயணத்தின் டிக்கெட் விலை, வரிகள் உட்பட RM84 முதல் தொடங்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன