சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘காப்பான்’ திரைப்படம்
கலை உலகம்

ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘காப்பான்’ திரைப்படம்

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியிடு கண்ட ‘காப்பான்’ திரைப்படத்தை நவம்பர் 28-ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களிக்கலாம்.

இத்திரைப்படத்தில் கிராமத்தில் வசிக்கும் சூர்யா ஒர் ஆர்கானிக் விவசாயி ஆவார். பிறகு, இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். தீவிரவாதிகளிடம் இருந்தும், உள்நாட்டு துரோகிடமிருந்தும் பிரதமரை பாதுகாக்க சூர்யா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

கதாநாயகியாக வரும் சாயிஷா சூர்யா மீது காதல் வசப்பட்டு அவரை விரட்டி காதலிக்கும் வேளையில் அவர் மீது பிரதமரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறார். இதற்கிடையில், இத்திரைப்படத்தில் மோகன்லாலும் ஆர்யாவும் இந்தியப் பிரதமர்களாக வலம் வருகின்றார்கள். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அண்மையில் ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்த ‘சாஹோ’, சித்தார்த் கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிப்பில் ‘அருவம்’,  ஜோதிகா மற்றும் ரேவரி நடிப்பில் வெளிவந்த ‘ஜாக்பாட்’, அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, நயன்தாரா முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கொலையுதிர் காலம்’, அஜித் குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன