சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மன்னிப்பு கேள்! சார்ல்ஸ்க்கு ஜாக்கிர் நைய்க் 48 மணி நேர கெடு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மன்னிப்பு கேள்! சார்ல்ஸ்க்கு ஜாக்கிர் நைய்க் 48 மணி நேர கெடு

பெட்டாலிங் ஜெயா, நவ.28-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக, டிஏபியின் இரு தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் தம்மையும் தொடர்பு படுத்தி அவதூறாக பேசிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மீது சட்டநடவடிக்கையை எடுக்கவிருப்பதாக சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாக்கிர் நைய்க் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நாளில், டிஏபியின் தலைவர்கள் இரவு நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டது குறித்து சார்ல்ஸ் சந்தியாகோ நேற்று முன்தினம் கேள்வியெழுப்பியிருந்தார்.

அது தொடர்பில், ஜாக்கிரின் வழக்கறிஞர் சார்ல்ஸிற்கு நோட்டிசை அனுப்பியுள்ளார். அதில், கடந்த சில மாதங்களாக ஜாக்கிர் தொடர்பில், நீடித்து வந்த பல்வேறு சர்ச்சைகளைத் திசைத்திருப்புவதற்காக, அவர் அமலாக்கத் தரப்பினருடன் பின்வாசல் வழியே தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறும் சார்ல்ஸின் அறிக்கை அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

டிஏபியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பின்னால், ஜாக்கிர் இருப்பதாகவும் அரசியல் நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட தரப்பினரை பயன்படுத்தியிருப்பதாகவும் சார்ல்சின் அறிக்கை காட்டுகின்றது.

அவரது அக்குற்றச்சாட்டுகள் அவதூறானவை. அவற்றில் உண்மைகள் இல்லை. தன் மீது தீய நோக்கத்திற்காகவும் வெறுப்பை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றை சார்ல்ஸ் முன்வைத்திருப்பதாகவும் ஜாக்கிரின் வழக்கறிஞர் நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கறிஞர் நோட்டிஸ் பெற்ற அடுத்த 48 மணி நேரத்திற்குள் சார்ல்ஸ் தனது அறிக்கையை மீட்டுக்கொண்டு வெளிப்படையாக மன்னிப்பைக் கேட்க வேண்டுமென ஜாக்கிர் நைய்க் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஜாக்கிரின் வழக்கறிஞர் நோட்டிஸ் குறித்து, தமது வழக்கறிஞருடன் தாம் விவாதித்து வருவதாக சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன