சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பி.கே.ஆர். மாநாட்டில் அன்வார் மீது நம்பிக்கையில்லா தீர்மானமா?
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர். மாநாட்டில் அன்வார் மீது நம்பிக்கையில்லா தீர்மானமா?

பெட்டாலிங் ஜெயா, டிச.1-

அண்மையில், பி.கே.ஆரிலிருந்து சில உறுப்பினர்களை அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நீக்கியதை, அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உள்பட அவரது ஆதரவாளர்கள் நிராகரித்திருந்தனர்.

இந்நிலையில், பி.கே.ஆர் இளைஞர் பிரிவிலுள்ள ஒரு தரப்பினர், அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், அக்கட்சியின் மாநாட்டில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பி.கே.ஆர். லெம்பா பந்தாய் இளைஞர் பிரிவின் துணைத்தலைவரான நஸ்ரின் இதாம் ரசாலி தலைமையிலான அத்தரப்பினர், அஸ்மின் அலியின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கை காரணமாக, கட்சியில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை வாயிலாக கூறியுள்ளனர்.

பி.கே.ஆரின் அமைச்சர்களும் துணையமைச்சர்களும் தங்களின் கடமைகளைச் செய்வதில் தோல்வி கண்டுள்ளனர். தனது கடமையை மேற்கொள்வதிலும் உறுப்பினர்களின் முடிவிற்கு கட்டுப்படிவதிலும், சீர்த்திருத்த நடவடிக்கையை முழுமைப்படுத்துவதிலும் ஒரு தலைவராக அன்வார் தோல்வி கண்டுள்ளார்.

நாட்டின் 8ஆவது பிரதமர் ஆவதில் அன்வார் முனைப்பு காட்டி வருவது தங்களுக்கு அதிருப்தியை அளிக்கின்றது. அவர் சொந்த நலனிலேயே கவனம் செலுத்துவதாக அத்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன