சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சீனர் அல்லாதவர்களுக்கு கதவைத் திறந்த ம.சீ.ச!
அரசியல்முதன்மைச் செய்திகள்

சீனர் அல்லாதவர்களுக்கு கதவைத் திறந்த ம.சீ.ச!

கோலாலம்பூர், டிச.1-

சீனர் அல்லாதவர்கள் தங்களது கட்சியில் இணை உறுப்பினர்களாக இணைவதற்கு, ம.சீ.ச அதன் சட்டத்தில் திருத்தத்தைச் செய்துள்ளது. ஆயினும், இணை உறுப்பினர்களாக இணைபவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாது.

மேலும், கட்சியில் இளம் உறுப்பினர்களை அதிகரிக்கும் வகையில், உறுப்பினர்களாக சேர்வதற்கான அடிப்படை வயதை 18-இலிருந்து 16-ஆகவும் அக்கட்சி குறைத்துள்ளது.

இன்று, நடைபெற்ற ம.சீ.சவின் 66ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்ட 1,499 பேராளர்களில் பெரும்பான்மையோனோரின் ஆதரவுடன் அந்த சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.

முன்னதாக, ம.சீ.ச.வின் அம்மாநாட்டை தேசிய முன்னணியின் தலைவரான டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமீடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன