செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதைத் தாமதப்படுத்தாதீர்! -பேராசிரியர் இராமசாமி
அரசியல்முதன்மைச் செய்திகள்

அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதைத் தாமதப்படுத்தாதீர்! -பேராசிரியர் இராமசாமி

பெட்டாலிங் ஜெயா, டிச.2-

துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து பிரதமர் பொறுப்பை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டுமென பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

அந்த அதிகார மாற்றம் நடக்காவிட்டால், கடந்த மாதம் ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்விக் கண்டதைப் போல், இடைத்தேர்தலில் தோல்வி காண நேரிடும் என பக்காத்தான் ஹாராப்பானுக்கு அவர் நினைவுறுத்தியுள்ளார்.

அதிகார மாற்றத்தில் பக்காத்தான் தீர்வு  காணாமல் உள்ளது, துன் மகாதீர் முழு தவணைக்கும் பிரதமராக இருக்க வேண்டுமென சில தரப்பினர் விரும்புவது போலான ஒரு தோற்றத்தைக் காட்டுகின்றது. அதிகார மாற்றம் தொடர்பில் உறுதியான நிலைப்பாடு இல்லாதது, பக்காத்தானுக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தும்.

அமானா, பெர்சாத்து மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்துள்ளது. பி.கே.ஆரில் பிளவு ஏற்பட்டுள்ளது. மலாய் அல்லாதவர்கள் குறிப்பாக, சீனர்கள் டிஏபியை விட்டு விலக தொடங்கியுள்ளனர். அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெறுமா? என்பது அதிகார மாற்றத்தையே சார்ந்திருப்பதாகவும் பேராசிரியர் இராமசாமி அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன