செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! இளைஞர் பிரிவு
அரசியல்முதன்மைச் செய்திகள்

அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! இளைஞர் பிரிவு

பெட்டாலிங் ஜெயா, டிச.2-

இவ்வாரம் நடைபெறவுள்ள பி.கே.ஆரின் இளைஞர் பிரிவு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலை 2019 இளைஞர் பிரிவு மாநாட்டிற்கான தீர்மானம் மற்றும் விவாதத்திற்கான செயற்குழுவின் தலைவர் சுவா வெய் கியாட் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னதாக, பி.கே.ஆர், லெம்பா பந்தாய் இளைஞர் பிரிவின் உதவித் தலைவர் நஸ்ரின் இதாம் ரசாலி, அனாவ்ருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தது குறித்து அவர் கருத்துரைத்துள்ளார்.

நாங்கள் ஆராய்ந்ததில், நஸ்ரின் கூறியது போல், அன்வாருக்கு எதிராக எவ்வித தீர்மானங்களும் இல்லாதது தெரிய வந்துள்ளது என சுவா வெய் கியாட் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன