செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அனிஃபா அமானின் வெற்றி செல்லாது; விரைவில் இடைத்தேர்தல்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

அனிஃபா அமானின் வெற்றி செல்லாது; விரைவில் இடைத்தேர்தல்!

புத்ராஜெயா, டிச.2-

முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் கடந்த பொதுத்தேர்தலில் கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது எனும் தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியுள்ளது.

அவ்வழக்கின் உண்மைத் தன்மையை தேர்தல் நீதிமன்றத்தின் நீதிபதி, கண்டறிந்ததில் தவறுகள் ஏதும் இல்லை என ஐவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்றிருந்த நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ தெங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான அனிஃபா அமான், 11,942 வாக்குகள் பெற்ற வேளையில். வாரிசான் கட்சியின் வேட்பாளரான கரிம் பூஜாங் 11,786 வாக்குகள் பெற்றார். வெறும் 156 பெரும்பான்மை வாக்குகளில் மட்டுமே அனிஃபா வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், அனிஃபா கரிமிற்கு வழக்கின் செலவுத்தொகையாக 70 ஆயிரம் ரிங்கிட்டைச் செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி குழு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றத்தின் முடிவு தமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என கூறியிருக்கும் அனிஃபா, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன