ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > டிசம்பர் 5 பிரமாண்டமாக வெளியீடு காண்கின்றது  காராங் (Garang) திரைப்படம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

டிசம்பர் 5 பிரமாண்டமாக வெளியீடு காண்கின்றது  காராங் (Garang) திரைப்படம்

சக்தி பிலிம்ஸ் தட்சனமூர்த்தி தயாரித்துள்ள காராங் திரைப்படம் டிசம்பர் 5 தொடங்கி மலேசியா முழுவதும் வெளிவரவிருக்கின்றது.

75க்கும் அதிகமான திரையரங்கில் வெளியீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தில் முழுக்கமுழுக்க மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்கள் என்பதை இப்படம் கருவாக கொண்டுள்ளது.

மலாய் மொழியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இது மலேசிய திரைப்படம். பொதுவாக மாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகள் குறித்து இந்த படத்தில் பேசப்பட வருகின்றது.

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மலேசிய ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன