கோலாலம்பூர் டிச. 3-

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் 40 மரக்கன்றுகளை நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நடவு செய்தார்.

நாடாளுமன்றத்தின் ஆதரவோடு, நீர் நிலம் இயற்கை வள அமைச்சின் ஏற்பாட்டில் இந்த மரம் நடவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காட்டு மரங்கள் செங்கால், பெலியான், மெராத்தி குனிங், கபூர், ஜெலுதொங் உட்பட மலேசியாவின் தேசிய மரமான மெர்பாவ் மரக்கன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடப்பட்டது.

இந்த மரங்கள் நடும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இதனிடையே தங்களின் நாடாளுமன்ற பகுதிகளிலும் மரங்களை நடவு செய்ய வேண்டும் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.