செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ் நேசனின் முன்னாள் நிருபர் எஸ்.டி.மணியம் காலமானார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ் நேசனின் முன்னாள் நிருபர் எஸ்.டி.மணியம் காலமானார்

கோலாலம்பூர், டிசம்பர் 5-

தமிழ்நேசனின் முன்னாள் நிருபரும் மூத்த எழுத்தாளருமான எஸ்.டி.மணியம் இன்று காலமானார்.

தெலுக் இந்தான் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான அவர் திடீரென்று காலமானது அங்குள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுக் இந்தான், தஞ்சோங் மாலிம் வட்டாரங்களிலும் நிகழும் சம்பவங்களை பத்திரிக்கை செய்தியின் மூலம் மக்களுக்கு தெரிவுப்படுத்தக்கூடியர் எஸ்.டி.மணியம்.

78 வயதுடைய அவர் திருக்குறள் மணியம் என்றும் அனைவராலும் அழைக்கப்படுவார்.

அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற  மலேசியத் தமிழ் காப்பகம் ஆதரவில் மலேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கவிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கவிதை படைத்து பாராட்டும் பெற்றார்.

சமுக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த அவரின் மரணம் தெலுக் இந்தான் வட்டார மக்களை மட்டுமல்லாது எழுத்துழகிற்கும் பெரும் இழப்பாகும்.

அவரது இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை 6ஆம் தேதி காலை 10.00 தொடங்கி 12.00 வரையில் எண் 123 லோரோங் சிக்கு 10, தாமான் இம்பியான் ஜாலான் சங்காட் எனும் முகவரியில் நடைபெறும்.

மேல் விவரங்களுக்கு 012-5239220 அல்லது 017-2929146 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

அன்னாரின் குடும்பந்தாருக்கு  அநேகன் இணையத்தள பதிவேட்டின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன